Thursday, July 26, 2018

செம்மரம் வளர்ப்பு....

செம்மரம் வளர்ப்பு....




செம்மரத்திற்கும் தமிழர்களுக்குமான பந்தம் இன்று நேற்றல்ல, தலைமுறை தலைமுறையாக பாரம்பரியமாக தொன்றுத்தொட்டு வருகிறது என்று சொல்கிறார், சிவகங்கை மாவட்டம் ஆ.கருங்குளத்தை சேர்ந்த சாதனை விவசாயி எம்.முருகேசன். 

எம்.முருகேசன் செம்மரத்துடன்
செம்மரம் வெட்டியதற்காக தமிழர்களை கொன்று குவித்த ஆந்திரா, இப்போது செம்மரத்திற்கு காப்புரிமை கேட்கிறது என்ற அதிர்ச்சி தகவலையும் அவர் வெளிப்படுத்துகிறார். அதோடு செம்மரம் என்பதை மற்ற மரங்களைப் போல் சாதாரணமாக வளர்க்க முடியாது. அதற்கு ஏகப்பட்ட வழிமுறைகள் இருக்கிறது. அந்த நடைமுறைகளையும், மரம் வளர்ந்தபின் அவற்றை வெட்டுவதற்கு மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகள் பற்றியும் தெளிவாக குறிப்பிடுகிறார். 

தனது பண்ணையில் 20,000 செம்மரங்களை வளர்த்து வருகிறார். முதல் தர செம்மரம் ஒரு டன் ரூ.1.5 கோடிக்கு மேல் விலை போகிறது. அது எப்படி என்ற அந்த விவரத்தை இந்தக் காணொலியில் காணுங்கள். நிறைய விவசாயிகள் செம்மரத்தை பயிரிடும்போதுதான் அதன் விலை குறையும். அப்படியே குறையவில்லை என்றாலும் நமது விவசாயிகளாவது 20 வருடங்கள் கழித்து கோடீஸ்வரர்கள் ஆகட்டும்..!

https://youtu.be/5_s3CfSh9pE

No comments:

Post a Comment

உடைந்த எழும்பைக் கூட ஒட்ட வைக்கும் மூலிகை:அதிர்ந்து போன மருத்துவர்கள்

உடைந்த எழும்பைக் கூட ஒட்ட வைக்கும் மூலிகை:அதிர்ந்து போன மருத்துவர்கள். =================================  February 7, 2019 (ப.ப) இன்றைக...

உழவர் சந்தை